அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது பழைய பாண் துண்டாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். இந்த எண்ணங்கள் பழையது.
சரியாக கூறுவதாயின் 'பழைய பாண் துண்டுபோன்றதாகும்' எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை குழப்புவதற்காக இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதே 13 ஆவது திருத்தமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜே.வி.பி மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற ஜே.வி.பி கட்சி உறுப்பினர்களை விலக்கிக்கொள்வீர்களா? எனக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் தொடர்பில், அன்றிலிருந்தே இந்த அரசியல் எண்ணங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. ஆட்சியிலிருக்கும் கட்சி சிறுகட்சிகள் ஊடாக 13 ஆவது திருத்தத்தை பயன்படுத்தி 'பழைய பாண் துண்டை' இனவாத கண்கொண்டே பார்த்தது.

அதனையே இந்த அரசாங்கமும் செய்துகொண்டிருக்கின்றது. அதுவேண்டாம், இது வேண்டும் என்று யார் கோஷம் எழுப்பினாலும் இந்தியா கைநீட்டுக்கின்ற போது பலர் அமைதியடைந்துவிடுகின்றனர். ஜனாதிபதியின் சகோதரர் இந்தியாவுக்கு சென்று திரும்பினார்.
இந்தியாவுக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் இன்று மௌனம் காத்துநிற்கின்றனர். 13 ஆவதுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் எங்கே? எதனை நீக்கினார்கள்?
எனினும் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக இருப்பதனை கொடுப்பதை விடவும் அதற்கு அப்பால் வழங்குவதற்கு இவர்கள் இந்தியாவுக்கு உறுதிபூண்டுள்ளனர்.
அது என்னவென்று யாருக்கு தெரியும்? இந்த மாகாண சபை முறைமையானது நாட்டுக்கு பாரமானது. நாட்டிக்கு எவ்விதமான சேவைகளையும் செய்யாத முதலமைச்சர் மற்றும் ஏனைய மாகாண அமைச்சர்கள் பாரியளவில் நிதியை செலவிடுகின்றனர் என்றார்.

இவ்வாறான நிலையில், மாகாண சபை முறைமையை முற்றாக இல்லாதொழிக்குமாறு நாம் கூறுகின்றோம். மக்கள் விடுதலை முன்னணி அன்றும் கூறியது. இன்றும் கூறுகின்றது நாளைக்கும் அதனை கூறும் என்றும் அவர் சொன்னார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்தவுடன் பிரிவினைவாத யுத்தம் நிறைவடைந்துவிட்டது. எனினும், பிரிவினைவாத அரசியல் சிந்தனைகள் எதிர்காலத்தில் தோன்றுமென்றும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் நாம் அன்று கூறினோம். அதனை உரிய வகையில் நிவர்த்தி செய்யாமையினால் இன்று இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
பிரிவினைவாதம் நாட்டுக்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் இன்று பலமடைந்துவிட்டது. நாட்டில் ஜனாநாயத்தை எற்படுத்தி சமூக சகோதரத்துவத்தை ஏற்படுத்தினால் இந்தியாவல்ல எந்த நாடும் எமது நாட்டிற்குள் தலையிடாது என்றார்.

0 comments :
Post a Comment