அ
மெரிக்காவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறிய இருவர், இணைந்து வாழத் துவங்கியுள்ளனர். அமெரிக்காவின், ஒக்லஹோமா மாகாணம், துல்சா நகரைச் சேர்ந்தவர், அரின் 17. தற்போது ஆணாக மாறியுள்ள இவர், இரண்டு ஆண்களுக்கு முன், "எமரால்ட்´ என்று அழைக்கப்பட்ட இளம் பெண்.
இவர், சில ஆண்டுகளுக்கு முன், தன்னுள் ஆண் தன்மை காணப்படுவதை உணர்ந்தார். நாளடைவில், தன்னை ஆணாகவே மாற்றிக்கொள்ள விரும்பிய எமரால்ட், அமெரிக்காவில் உள்ள பிரபல வைத்தியசாலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தன்னை ஆணாக மாற்றிக் கொண்டார்.
அதே போல், இவருடன் நட்புடன் பழகி வந்த, ஆண் நண்பரான, லூகே, 19, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம், தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார். இவர் தற்போது, "காட்டியே´ என அழைக்கப்படுகிறார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இருவருக்கும் இடையிலான இல்லற வாழ்க்கை மிகவும் இனிதாக அமைந்துள்ளதாக, இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரின் குறிப்பிடுகையில், "நான் பெண்ணாக இருந்த போது, மேலாடை இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்க முடியாததை எண்ணி வருந்தியுள்ளேன். தற்போது அந்த பிரச்னை இல்லை,´´ என்றார்.
இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், இவர்கள் மனதளவிலும் எந்த பிரச்னையும் இன்றி இயற்கையான ஆண், பெண் போன்றே வாழ்கின்றனர்.

0 comments :
Post a Comment