
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுவது என அக்கட்சியின் அதியுயர் பீடம் உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீட கூட்டம் நேற்றுவெள்ளிக்கிழமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இப்தாரைத் தொடர்ந்து ஆரம்பமான இக்கூட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது.
இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
யாரிடமிருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இம்முடிவில் மாற்றம் செய்வதில்லை என்றும் அதிஉயர் பீடம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment