( எஸ்.அஷ்ரப்கான் )
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இருளடைந்து
கிடக்கும் இடங்களில் மின்குமிழ்களை ஒளிரவைக்கும் நடவடிக்கையில் கல்முனை
முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் இன்று (09) செவ்வாய்கிழமை சற்று
முன்னர் மாலை 7 மணியிலிருந்து களத்தில் வீதிவீதியாக தெருமின் விளக்குகளை
பொருத்தி ஒளிரவைத்து வருகிறார்.
முஸ்லிம்களின் புனித நோன்பு காலம் ஆரம்பிப்பதையிட்டு தனது சேவையின்
றமழானுக்கான முதல்பரிசாக பிரதேசங்களை ஒளியூட்டி வருகிறார்.
கல்முனை முதல்வராக இவர் பதவியை பொறுப்பேற்றதிலிருந்து பிரதேச மக்களுக்கு
பல்வேறு சேவைகளை செய்துவருகிறார். மழை காலங்களில் மக்கள்
உறக்கத்திலிருக்கும்போது அதிகாலை ஒரு மணிக்கும் களத்திலிருந்து வெள்ள
நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்.
இவ்வாறு கால சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மக்கள் தேவையறிந்து
சேவையாற்றும் இவர் கல்முனை பிரதேச மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து
வருகிறார். உறக்கத்திலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இவர் ஒரு
முன்மாதிரியான அரசியல்வாதியாகுமென மக்கள்
தெரிவிக்கின்றனர்.

0 comments :
Post a Comment