
ரமழான் நோன்பு ஆரம்பித்துள்ளதையிட்டு அனைத்து உள்ளங்களுக்கும் எமது மகிழ்வை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நோன்பு மூலம் மனிதர்களுக்கு நல்ல விமோசனமும் இறை அருளும் கிடைக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம்.
அதே போல் கடந்த ரமழானில் தலை நிமிர்ந்து நின்ற பள்ளிவாயல்கள் சில தலை இன்று தலை கவிழ்ந்துள்ள நிலையில் எமது பள்ளிவாயல்கள் பாதுகாக்க்ப்படும் சூழ் நிலை நாட்டில் உருவாக நாம் அனைவரும் பிராhத்திப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்.
நோன்பு மாதம் என்பது தொழுகையிலும் நோன்பு பிடிப்பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் சிறப்பான மாதம் மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு பறை சாற்றும் மாதமாகும்.
இறைவனுக்காக நோன்பிருந்து ஆசைகளை கட்டுப்படுத்தி சைத்தானுடன் போராடுவது போன்று நமது வாழ்வினல் முக்கியம் செலுத்தும் பொருளாதாரம், சமூக வாழ்க்கை, அரசியல் என அனைத்திலும் சைத்தானியத்தை எதிர்த்து இறைவனுக்கு விருப்பமானவர்களாக வாழ இறைவன் நமக்கு அருள் புரிவானாக. – மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
0 comments :
Post a Comment