அட்டாளைச்சேனை பாலமுனை உதவி தபால் அதிபருக்கு அஞ்சுறுத்தல்

துரைராஜ்
 பாலமுனை தபாலகத்தில் உவித் தபால் அதிபராக கடமையாற்றுகின்ற ஜீவகரன் சிந்துஜன் என்பவருக்கு 08.07.2013 தபால் காரியாலத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளர் (எம்.எ .றினாஸ்) முத்திரை வாங்குவற்கு வந்திருந்தார் .

அவருக்கு அவ் அலுவலத்தில் சமயாசமய ஊழியராக கடமையாற்றும் முஜாகித் என்பவர் முத்திரை வழங்கினார். 

அவர் இரண்டு 50ருபா முத்திரையை வாங்கி விட்டு 25ருபா முத்திரை 3ஐ ஊழியரிடம் தந்தார் அதற்கு உபாதபால் அதிபர் இங்கு முத்திரை விற்பது மாத்திரம் தான் என்று கூறினார் அதற்கு அவர் தகாக வார்தைகளால் எசிவிட்டு முத்திரைக்கு காசு தராமல் முத்திரையை தூக்கி எறிந்துவிட்டு 'நீ எந்த இடம் என்று வினாவியுள்ளார்' அவர் திருக்கோவில் என்றதும் தமிழ் பொடியன் தானே மோட்டார் சைக்கிளில் தானே போவாய் பாலமுனையை கடந்து எப்படி போவாய் என்று மரண அஞ்சுறுத்தல் விடுத்துவிட்டு சென்றுஉள்ளார்.

இதன் பின்னர் உதவி தபால் அதிபர் பிரதேச தபால் அத்தியட்சகர் காரியாலத்துக்கு அறிவித்து கூறியபோது பொலிஸ் இல் முறைப்பாடு செய்வதாக கூறிவிட்டு தொலைபேசி துண்டிக்கப்பட்டது அதன் பின்னர் 30 நிடங்கள் கழித்து பிரதேச தபால் அத்தியட்சகர் காரியாலத்தில் இருந்து தொலைபேசி அழைப்பின் மூலம் அக்கரைப்பற்று பொலிஸ் வரும் என்று கூறினார்கள்.
 பி.ப 4.30 மணியாகியும் பொலிஸ் வராததால் அவ் உதவி தபால் அதிபரின் நண்பனுக்கு அறிவித்தவுடன் பொலிஸ் வந்தனர் அதன் பின் தபால் காரியாலயம் பி.ப 5.00 மணிக்கு மூடிய பின்னர் வந்து முறைப்பாடு செய்யவும் எனக் கூறிவிட்டு சென்றனர் அதன் பின்னர் பொலிஸ்க்கு சென்று முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகிறது.

மேற்படி அச்சுறுத்தல் காரனமாக  பாலமுனை உதவித்தபால் அதிபர் கடமைக்கு செல்லமுடியாத நிலைமையில் உள்ளதாக அறியமுடிகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :