கனடா விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட பிரபல நடிகை

மலஹாசன், ஷாருக்கான், இர்பான் கானுக்கு அமெரிக்காவில் விசாரணை என்ற பெயரில் அவமரியாதை நிகழ்த்தப்பட்ட நிலையில் தற்போது இந்திய நடிகை ஒருவரை கனடா விமான நிலையத்தில் அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். 

அமெரிக்காவுக்கு போகும் இந்தியர்கள் பலருக்கும் இத்தகைய அவமானங்கள் தொடர் கதையாகி வருகிறது.

அப்துல் கலாமையே விசாரணை செய்து இந்தியர்களை கொதிக்க வைத்தவர்கள் அமெரிக்கர்கள். இப்போது கனடாவிலும் இந்தியப் பிரபலங்களுக்கு சோதனைக் காலமாகியுள்ளது.

கமலஹாசனுக்கும் இப்படித்தான் அடிக்கடி நேர்ந்துள்ளது. அவரது பெயரை ஹாசன் என்று தெரியாமல் ஹசன் என்று அர்த்தம் எடுத்துக் கொண்டு நீ யார், உனக்கு யாருடனெல்லாம் தொடர்பு உள்ளது என்று குடைந்து குடைந்து பலமுறை விசாரித்துள்ளனர்.

இதேபோல ஷாருக் கானுக்கும் பலமுறை அமெரிக்க விமான நிலையங்களிலும், படப்பிடிப்புக்குப் போகும் தருவாயிலும் சோதனைகள் வந்துள்ளன.

பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கும் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனை வந்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது இந்திய நடிகை ரிதுபர்னா செங்குப்தா சேர்ந்துள்ளார். ஆனால் இம்முறை அமெரிக்காவில் அல்ல கனடாவில்.

விசாரணை என்ற பெயரில் டோரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் வைத்து ஐந்தரை மணி நேரம் ரிதுவை அலைக்கழித்துள்ளனராம்.

ரிதுபர்னா டோரன்டோ போய் இறங்கியவுடனேயே அவரை விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போனார்களாம். உங்களது விசா முடிந்து போய் விட்டது என்பதுதான் காரணமாம்.

ஆனால் 2015 வரை தனக்கு விசா காலம் இருப்பதை ரிதுபர்னா சுட்டிக் காட்டியும் அதை அங்குள்ள அதிகாரிகள் ஏற்கவில்லையாம்.

ரிதுபர்னாவின் விசாவை மட்டும் விசாரிக்காமல், அவர் கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் சோதனையிட்டார்களாம். சூட்கேஸைத் திறந்து பார்த்து என்னவெல்லாம் இருக்கிறது என்று ஆய்ந்தார்களாம்.

அவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியையும் பிடுங்கி வைத்துக் கொண்டு விசாரித்தார்களாம்.

இந்த சோதனையால் ஏற்பட்ட விரக்தியால் ரிதுபர்னா அழுதுள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவர் மன நிலை பாதித்தவர் என்றும் கூறியுள்ளனராம்.

அவரை மருத்துவமனைக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறினார்களாம். இதுகுறித்து ரிதுபர்னா கூறுகையில்,

எனது விசாவை வைத்து பெரும் பிரச்சினையாக்கி விட்டார்கள். சரி விசாவைக் கேன்சல் செய்து என்னை திருப்பி அனுப்புங்கள் என்றால் அதுவும் முடியாது என்று கூறினார்கள்.

இப்படி நீண்ட நேர அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒரு வழியாக கனடாவுக்குள் நுழைய ரிதுபர்னாவை அதிகாரிகள் அனுமதித்தனராம். அதன் பிறகு அவர் வங்க சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ரிதுபர்னாவுடன் அவரது 80 வயதான மாமனார், மாமியாரும் உடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிதுபர்னா தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :