கொழும்பில் 211 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை

ருடத்தின் முதல் ஒரு மாதத்திற்குள் வரி செலுத்துவோருக்கு 15 வீத தள்ளுபடி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

காலாண்டுக்கு காலாண்டு வரி செலுத்துவோருக்கும் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன அறிவித்துள்ளார்.

இதுவரை வரி செலுத்தாத 211 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் வரி செலுத்தாதோரின் சொத்துக்களில் காணப்படும் அசையும் சொத்துக்களை ஏலத்திற்கு விட்டு மாநகரசபைக்கு பணத்தை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :