யாழ்ப்பாணம் சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன், பொது மக்களது வீடுகளையும், உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக அப்பகுதி கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் நகரமத்தி ஜே198 கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் குறித்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும், சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் நகரப்பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வருகைதருமாறு சுன்னாகம் நகர் மத்தி கிராம அலுவலர் அறிவித்துள்ளார்.
சுன்னாகம் நகர மத்தியில் காங்கேசன்துறை வீதியில் சுமார் 14 வீடுகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.அரியாலையில் மணல் கடத்தல் சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 உழவு இயந்திரங்கள் யாழ். பொலிஸாரினால் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் அதில் வந்தவர்களும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
இவர்கள் இன்று திங்கள் கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் சாதாரணமான அளவில் அல்லாது கூடுதலான மணல் ஒவ்வொரு உழவு இயந்திரத்திலும் ஏற்றப்பட்டு வந்த வேளையில் பொலிஸார் இவர்களை மடக்கிப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment