SLMC தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பலஸ்தீனம் பயணம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (03) அதிகாலையில் பலஸ்தீனத்திற்கு பயணமானார்.

எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் அங்கு நடைபெறவுள்ள பைத்துல் முகத்திஸ் 4ஆவது சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அழைப்பை அந்நாட்டு வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் மஹ்மூத் அல் ஹப்பாஷ் அண்மையில் இலங்கை வந்திருந்த பொழுது நேரடியாகவே அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்திருந்தார்.
இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பலஸ்தீன புனித பூமியில் அங்கு வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்தும் இந்த சர்வதேச மாநாட்டின் போது உரிய கவனம் செலுத்தப்படவுள்ளது. அமைச்சர் ஹக்கீம் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :