சீரற்ற வானிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு முன்னெச்சரிக்கை விடுப்பதற்காக செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஜனாதிபதி இந்த அறிக்கையை கோரியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலையினால் 14 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 24 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்தொழில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment