எட்டு வருடங்களுக்கு முன்னர் எட்டு வயதுடைய பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 58 வயதுடைய வயோதிபருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் சமல் விக்ரம ஆராச்சி 60 வருட சிறைதண்டனையும் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி ரிதிகம என்ற இடத்திற்கு 8 வயது பாடசாலை சிறுமியை அழைத்துச் சென்று தேவாலய வளவில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த வை.சுகத்தபால சுனில் (வயது 58) என்பவரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்தனர்.
மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபருக்கு எதிரான வழக்குவிசாரணை குருணாகலை மேல் நீதி மன்றத்தில் நீதிவான் சமன் விக்ரம ஆராச்சி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சியங்களின் பிரகாரம் சந்தேக நபரை குற்றவாளியாகக் கண்ட நீதிவான் ஒரு குற்றச்சாட்டிற்கு 20 வருட சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதம் என்ற அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு 60 வருட சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று அபராதங்களுக்கும் தலா ஆறு மாத கால சிறைத்தண்டனைகளை மேலதிகமாக அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

.jpg)
0 comments :
Post a Comment