நேற்று இருவேரு செவ்விகளை வாசிக்க கிடைத்தது. முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்த அரசியல் தலைமைகளின் கையாளாகாத்தனத்தின் வெளிப்பாடாக அச்செவ்வி அமைந்ததை இட்டு கவலையடைகின்றேன்.
வாழைச்சேனை சம்பவம் இடம்பெற்ற போது உடனடியாக ஒரு கட்சியின் தலைவர் விசேட ஹெலி மூலம் வருகை தந்தார். ஜனாசாவினை எடுத்து வந்து அடக்கம் செய்ய கிடைக்கும் என ஒறளவு நம்பிக்கையும் கட்சி போராளிகளிடம் கானப்பட்டது.
ஹலால் விடயம் தொடர்பில் அறிக்கை விடுக்கொண்டு இருந்த உலமா சபை 13வது திருத்தம் குறித்து பாதுகாப்புச்செயலாளருக்கு பயந்து மௌனிப்பதாக அச்செவ்வி குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு நிகழ்வின் போது உலமாக்கள் இராணுவ முகாம்களுக்கு சென்று பேசத்தேவை இல்லை என்று கதையாடப்பட்டுள்ளது.
மற்றொரு நிகழ்வின் போது உலமாக்கள் இராணுவ முகாம்களுக்கு சென்று பேசத்தேவை இல்லை என்று கதையாடப்பட்டுள்ளது.
கடந்த கால அரசியல் கள நிலைகளில் தமது தனிக்கட்சி நாடகங்கள் சமூகத்தின் நம்பிக்கையீனதை ஏற்படுத்தும் போதெல்லாம் மௌனித்திருந்து சூழ்நிலை தெளிவாகின்ற போது மக்களிடம் தமது இயலாமைகளை மறைத்து பிழையான இங்கித வார்த்தைகளை வீசி தமது வாக்கு வங்கியை சரி செய்து கொள்ளும் யுக்தி முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ளாத ஒன்றல்ல.
முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற போது கட்சி நலன் கட்சி நலன் என்று கூறிக்கொண்டு அரச சுக போகங்களை அநுபவித்துக்கொண்டு அமைச்சுப்பதவிகளையும் சலுகைகளையும் தூக்கியெரியாமல் ஊடகங்களுக்கு வீராப்பும் அரச அறைக்குள் மண்டியிடலும் வெளிக்குவராத உணமைகள் என்பது யாவரும் அறிந்தது.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டதன் விளைவுகள்தான் இன்று சிவில் சமூக பிரதிநிதிகளையும் உலமா சபையினையும் மக்கள் நம்ப வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர்.
முஸ்லிம்களின் கூட்டு அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக பேச அழைத்த போதெல்லாம் புறக்கனிப்பு செய்த இத்தகைய தலைமைகள் உலமா சபையினை விமர்சிக்கின்ற அளவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என கருதுகின்றேன்.
முஸ்லிம் அரசியல் தலமைகள் ஒற்றுமை குறித்து உலமா சபை முன்னெடுத்ததன் விளைவாக பின்னர் உலமா சபை மீது பிழயான குற்றச்சாட்டுக்களை அடிப்படைவாத பேரின அமைப்புக்கள் முன்வைத்த போது தனித்து நின்று உலமா சபை போராடிய போது இந்த தலைமைகள் சீலைத்தலைப்புக்குள் ஒழிந்து கொண்டும் , வெளி நாட்டு சுற்றுப்பயணம் என்றும் திருவிளையாடல் பன்னியது ஒன்றும் தெறியாத விடயமல்ல.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதிகார போட்டியினால் பிளவு பட்டு கதிரைகளுக்காக சண்டை பிடித்துக்கொண்டு மாற்று தரப்பினரால் தூக்கெயெரியப்படும்போதுஉலமாக்களும்,முஸ்லிம்சிவில்அமைப்புக்களும்தமதுசமூகத்தின்பிரச்சிணைகளுக்குதீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசியே ஆகவேண்டும் என்ற இஸ்லாமிய விதிமுறைகளை பின்பற்றியது ஒன்றும் தவரல்ல.
முஸ்லிம்காங்கிரசுக்குள் கசாப்புக்கடை வியாபாரம் இடம்பெற்ற போது பேச்சுவார்த்தையில் இருந்து முஸ்லிம் காங்கிரசை மூண்றாம் தரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேச்சுவார்த்தையில் இருந்து பார்வையாளர் கலரிக்கு மாற்றப்பட்ட போது வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அன்றாட வாழ்வாதரப்பிரச்சிணைகளுக்கு உலமாக்களும் சிவில் சமூகமும் புலிகளுடன் பேச வேண்டி ஏற்பட்டது.
வாழைச்சேனை வன்முறையின் போது கொடூரமாக எரிக்கப்பட்ட ஜனாசாக்களை பார்வையாளராக பார்த்;து நின்றுவிட்டு தமது பங்காளி அரசாங்கத்துடன் தொடர்ந்தும ஒட்டியிருந்து எத்தகைய சமூக நலத்தை காக்க முடிந்தது?. கட்சி நலமா சமூக நலமா என்ற கேள்விக்கு எப்போதும் கட்சி நலமே முதனமைப்படுத்தப்பட்ட தீர்வாக சிருபான்மை அரசியட்கட்சிகள் கொண்டுள்ளமை கவலைக்குறியதே.
நோர்வையில் தனித்தரப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் விட்ட போதும், ஹலால் மற்றும் இன்னோரன்ன முஸ்லிம் விவகாரங்களுக்கான அம்சங்கள் சூடு பிடித்த போதும் விலாங்கு மீனாக நழுவிக்கொண்டு உலமா சபை மீதும், சிவில் சமூகம் மீதும் பந்தை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்னர் விமர்சிப்பதும் எத்தகைய அரசியல் சானக்கியம் என்ற கேள்வி எழுகின்றது.
வாழைச்சேனை சம்பவம் இடம்பெற்ற போது உடனடியாக ஒரு கட்சியின் தலைவர் விசேட ஹெலி மூலம் வருகை தந்தார். ஜனாசாவினை எடுத்து வந்து அடக்கம் செய்ய கிடைக்கும் என ஒறளவு நம்பிக்கையும் கட்சி போராளிகளிடம் கானப்பட்டது.
பள்ளிவாசலுக்குள் வந்த அவர் தற்போது வாழைச்சேனை காகித ஆலையில் அமைந்திருக்கும் இராணுவ முகாமிற்கு சென்று அங்குள்ள பிரிகேடியருடன் பேசி உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறி வாகணத்தில் ஏறினார்.
நானும் அப்போது பினால் முகாம் நோக்கி சென்றேன். தலைவர் போய் சேரவும் ஹெலிகப்டர் பறபதற்கும் சரியாக இருந்தது. ஏமாற்றம் என் நெஞ்ஞை அடைத்துக்கொண்டதுதான் மிச்சம்.
அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளும் சிவில் சமூகம் உலமாக்களுடன் இணைந்து வன்முறைகளை முடிவுக்கு கொன்டுவரபட்ட இன்னல்களும் இவர்களுக்கு எங்கு புறியும்.
இஸ்லாமிய அடிப்படையில் களந்தாலோசனை என்பது ஒன்றும் தடை செய்யப்பட்ட அம்சம் அல்ல.ஷூறா என்பது முஸ்லிம் சமூகத்துக்குள் மாத்திரமல்ல மாற்று சமூகத்துடனும் பேசுவதனையும் குறிக்கும். முஸ்லிம்களுக்கு பிரச்சிணைகள் ஏற்படுகின்ற போது குறித்த பிரச்சிணைகள் குறித்து உலமாக்கள் சிவில் சமூகத்தின் உதவியுடன் பேசியே வந்துள்ளனர். கிரீஸ் மனிதன் பிரச்சிணை வந்த போது அரசியட்கட்சிகள் அறிக்கைகளோடே நின்றனர்.
இறுதியாக பாதுகாப்புச்செயலாளர் உலமாக்களையும் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் அழைத்து பேசிய மருகனமே அப்பிரச்சிணைக்கு முடிவு ஏற்பட்டது. இதில் யார் செய்கின்றார் யார் செயற்படுத்திகின்றார் என்பதனைவிட பிரச்சிணைகளில் இருந்து விடுபடுவதே முஸ்லிம்களது தேவையாக இருந்தது.
தம்புள்ளை பள்ளி உடைப்பு தொடர்பான பிரச்சிணைகளும் அதணைத்தொடர்ந்த பிரச்சிணைகளின் போதும் பாதுகாப்புத்தரப்பு உலமாக்களையும், சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் கவுரவமாக அழைத்து பேசிய போது அவர்கள் தெளிவாக முஸ்லிம்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினர்.
அதனால் சில உடனடித்தீர்வுகளும் கிடைத்துள்ளமை குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு அறிக்கை விட்டு பிழைப்பு நடத்தும் அரசியல் தலைமைகளுக்கு புறியப்போவதுமில்லை.
குறித்த ஒரு நிருவனம் தவருதலாக முஸ்லிம்களைப்புன்படுத்தும் விடயங்கள் தொடர்பில் உற்பத்தியினை மேற்கொண்ட விடயம் மருகனமே பாதுகாப்புத்தரப்புடனான பேச்சுக்களின் பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்கள் விடயத்தில் குரல் கொடுத்த ஒரு அரசியல் பிரமுகர் கைது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை தெளிவு படுத்தி சில மணி நேரங்களில் பாதுகாப்புத்தரப்பு அப்பிரமுகறை விடுதலை செய்தது வெளிப்படையாக நாங்கள் அவதாணித்த விடயங்கள்.
இவ்விடயங்களில் பலரது உழைப்புக்கள் மறைந்து கிடப்பது ஒன்றும் மருப்பதற்கில்லை ஆனால் இறுதிக்கட்ட நிகழ்வுகள் இத்தகைய ஆக்க பூர்வமான சந்திப்புக்களில் இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியாது.
எனவே முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சிணைகள் ஏற்படுகின்ற போது உலமா சபையும் சிவில் சமூகமும் முகம் கொடுக்கஇ வெரும் தமிழ் மொழி பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்து விட்டு ஒழிந்து கொள்வதும், கட்சி நலன் பேசுவதும் முஸ்லிம்கள் விடயத்தில் தீர்வாகாது.
13வது திருத்தம் தொடர்பில் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா தொடர்பில் இன்னும்முஸ்லிம்சமூகம்தீர்மானத்திற்குவரமுடியாதநிலையில்தொடரும்தமிழ்அதிகாரபயங்கரவாதம்,முஸ்லிம்கள்இருப்பஏற்றுக்கொள்ளாதமீள்குடியேற்றத்தை நேரடியாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் முலமும் முடக்க நினைக்கும்இத்தருனத்தில்தமிழ்அரசியட்தலைமைகளின்மௌனம்களையா, ஆக்க பூர்வ நடவடிக்கை இல்லாத நிலையில் எவ்வாறு திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் முடிவெட்டுவது.
முன்னால் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனக்கு பொலிஸ் அதிகாரம் என்றரீதியில்இந்தியஇராணுவத்தால்உருவாக்கப்பட்டதமிழ்த்தேசியஇராணுவத்தின்மூலம்முஸ்லிம்களைகொண்றுகுவித்ததும்,விடுதலைப்புலிகள்தமதுஅதிகாரத்தைப்பயண்படுத்திவடகிழக்கில்இனச்சுத்திகரிப்பைமேற்கொண்டதும்,தொடர்ந்துவந்ததமிழ்ப்போராட்டக்குழுக்கள் முஸ்லிகளை குறிவைத்ததும், தொடரும்முஸ்லிம்களதுமீள்குடியேற்றபிரச்சிணைகள்பாதுகாப்புஅச்சுருத்தல்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் தமது தொடர்ந்தும நம்பி இருப்பதா என்றகேள்விகளுக்குவிடையளிக்கமுடியாதநிலையில்தமதுஅரசியல்வங்குரோத்து நிலையை உலமா சபை மூலம் பழி தீர்த்து நியாயப்படுத்திக்கொள்ள முனைவது சிறுபிள்ளைத்தனமான ஒருவிடயமென கருதுகின்றேன்.
எனவே உலமாக்களோ, உலமா சபையோ அல்லது ஒரு முஸ்லிமோ தமது பிரச்சிணைகள் குறித்து இஸ்லாம் குறித்த புறிதழ்களை வழங்க எத்தகைய சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே கருதுகின்றேன்.
அடுத்தவர் தமது கடமைகளை செய்யாத போது சமூகம் அதனை தமது கையில் எடுப்பதை தவிர்க்க முடியாதாகும்.
அதே போன்று இஸ்லாம் எப்போதும் லிபரலாகவே செயற்பட விளைகின்றது. திறந்த இஸ்லாமிய கொள்கைகளை புறிந்து கொள்ள களந்தாலோசிக்க முனைவதே சிறுபான்மையான முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டிய மகதான பொருப்பாகும்.
13வதுதிருத்தம்தொடர்பில்தம்மைஒருபொருட்டாகவேகணிக்கவில்லையென்றால் பதவிகளை தூக்கியெரிந்துவிட்டு சமூகத்துடன் வந்து சேர்ந்து கொண்டால் சமூகம் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். அதை விடுத்து அதிகாரமற்று பல்வேறு பிரச்சிணைகளுக்கும் நாளாந்தம் முஸ்லிம் சமூகத்திலிருந்து செயற்படும் உலமாக்களையும் உலமா சபையினரையும் ஓரம்கட்ட நினைப்பது வரலாற்று துரோகம் என்பதுடன் உலமா சபையிடம் மண்ணிப்பு கோரவேண்டிய அம்சமுமாகும்.
.jpg)
0 comments :
Post a Comment