(எம்.பைஷல் இஸ்மாயில்)
கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்காக நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை (05) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த சுனாமியின் போது வீடுகளை இழந்த குடும்பத்த தலைவர்கள் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இதுரை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், அதனை வழங்குமாறு கோரியுமே இவ்வாறு தங்களின் படுக்கை, இருப்பு மற்றும் சாப்பாடு சமைக்கும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக தங்களின் இருக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தும் கூட அரசாங்க அதிபர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என்றும் எங்களுக்கான வீடுகளை தரும்வரையில் இவ்விடத்தை விட்டு போவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment