கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் புதிய அபிவிருத்தி -ஹரீஸ்

( நப்றிஸ் )

கர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிக்குமிடையே கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பற்றிய கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி, புதிய நகர அபிவிருத்தி மற்றும் நகரை அழகுபடுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்வதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு மேற்படி திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :