(எம்.எம். ஜெஸ்மின், ஏ.பி.எம். அஸ்ஹர்)
கல்முனை மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த 108 ஊழியர்கள் திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மாநகர சபை காரியலய கூரை மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது மாநகர சபையில் தொடர்ந்தும் ஊழியர்களாக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மற்றொரு தொகுதி ஊழியர்கள் மாநகர சபை முன்றலில் சுலோகம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிக்கின்றனர்
அங்கு கல்முனைப் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக கல்முனை மாநகர சபையில் தற்போது விசேட கூட்டமொன்று நடைபெறுகிறது.
கல்முனை மாநகர சபையில் அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த 108 ஊழியர்கள் நேற்று புதன்கிழமை (05) எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment