2013 ஆம் ஆண்டின் உலக சுற்றாடல் தின நிகழ்வு வெகுவிமர்சையாக திருகோணமலை மாட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் அதன் சிறப்பு நிகழ்வுகள் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்று வருகின்றன. உலக சுற்றாடல் தினத்தையொட்டி நேற்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதில் கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம்.ஹில்மி, நகரசபை உறுப்பினர் பாஜில், நகரசபை உத்தியோகத்தர்கள், கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் சமீம், எம்.ஓ.எச். டொக்டர் றிஸ்வி, பொலிஸ், பிரதேச முப்படை அதிகாரிகள், கிண்ணியா பாடசாலை மாணவ மாணவிகள் வருகை தந்திருந்தனர்.
இதில் வீதி ஒழுங்கு சம்பந்தமான விளிப்புணர்வு வீடியோ காட்சிகளையும் பொலிஸார் காண்பித்தனர். சுற்றாடல் தின வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றாடல் சம்பந்தமான நல்ல பல கருத்துக்களை கூறியதோடு அவற்றை நாம் எவ்வாறு பாதுகாத்து பயன்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய கிண்ணியா நகரபிதா ஹில்மி ‘நாம் ஒவ்வொருவரும் சூழலை பாதுகாப்பது கடமையாக உள்ளது. இத்தருணத்தில் உணர்ந்து செயற்பட வேண்டும். நல்ல பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் சூழலை பாதுகாக்க முடியும். எல்லா மதங்களும் சூழல் சம்பந்தமான ஒழுக்கங்களை போதித்துள்ளது.
இஸ்லாம் மதம் மரம் வெட்டுவதை கண்டித்துள்ளது. காரணம் சூழல் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை உணர்த்துவதற்காகவே. 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இத்தினம் கொண்டாடப்படவுள்ளது. கிண்ணியா நகரசபையும் இந்த வாரத்திற்கான செயற்பாடுகளை திட்டமிட்டுள்ளது.

மரம் நடுதல், சிரமதானம் செய்தல், பிரதேசத்தை சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றுதல், மாணவர்கள் பொதுமக்களுக்கு விளிப்புணர்வினை வழங்குதல், துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது’ என நகரபிதா தெரிவித்தார்.
சுற்றாடல் வாரத்தினையொட்டி இன்று மரம் நடுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல பொது இடங்கள், வீதியோரங்களில் மரங்கள் நடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாளைய தினம் சிரமாதானங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் நகரபிதா மேலும் தெரிவித்தார்.
இறுதியில் மரங்கள் மற்றும் கழிவுத் தொட்டிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment