அட்டாளைச்சேனை மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன். நசீர்.



(எம்.பைஷல் இஸ்மாயில்)

மது பிரதேசத்தின் நலன் தொடர்பான விடயங்களிலும், பிரிவின் அபிவிருத்தி வேலைகள் என்பன போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றவர்களும், நற்சிந்தனையும், நல்ல உள்ளம் கொண்டவர்களும் தான் இவ்வாறான குழுவில் இடம்பெறவேண்டும். பதவிகளில் இருப்பவர்கள் தனி மனித சுகபோகத்துக்காகவும், தனிப்பட்ட மற்றும் குடும்ப சுய நலனுக்காகவும் தன் பதவிகளை பாவித்து பிழையான முறைகளை கையாளுகின்றவர்கள் ஒருபோதும் பொதுச் சிந்தனை, பொதுச்சேவை என்பன பற்றி யோசிக்க மாட்டார்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவுக்கான கிளைக்குழு தெரிவுக்கான கூட்டம்  அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் சட்டத்தரணி றசீட் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். அவர் இருந்து வந்த காலங்களில் அவரோடு இருந்தவர்கள் சரிவர ஒத்துழைப்பு வழங்காமையின் காரணத்தால் அட்டாளைச்சேனை மத்திய குழுவை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. அதனால் மத்திய குழு ஒரு மந்த நிலையில் இயக்கம் பெற்றும் பெறாமல் இருந்து வந்த விடயம் நாம் அனைவரும் அறிந்த விடயங்களே. இந்நிலைமையில் எமது தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அதன் பொறுப்பை என்னிடம் கையளித்துள்ளார்.

இன்று பட்டம், பதவிகளுக்காக எத்தனை போர் சன்டையிட்டு போட்டி போட்டு பெற்றுக் கொள்கின்றார்கள். அவ்வாறு பெற்றுக்கொண்ட பட்டம் பதவிகள் மூலம் அற்ப சொற்ப இலாபத்துக்காகவும், தனி மனித சுகத்துக்கும், குடும்ப நலனுக்கும் என பாவித்து கையான்டு வருகின்றனர். இவ்வாறு செய்படுகின்றவர்களின் பட்டம், பதவிகள் ஒருபோதும் நிலையாய் நிலைப்பதில்லை. அது கொஞ்ச காலங்களுக்குள் போய்விடும்.

அவ்வாறு மறந்து செயற்பட்டவர்கள் இன்று எத்தனைபேர் உள்ளனர். என்பதை இன்று நாம் கண்ணூடாக காண்கின்றோம். இன்று எனக்கு கிடைத்த பட்டம் பதவிகள் நான் தேடிப்போய் பெற்றுக்கொண்டவை அல்ல. இதனை கிடைக்க ஏற்பாடு செய்தவன் என்னையும் உங்களையும் படைத்த இறைவனே! அவனின் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும். அந்த வகையிலேயே மக்களாகிய உங்களின் ஆதரவுகளினால் இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த பட்டம் பதவிகளாகும். இதனை நான் ஒரு போதும் மறைக்கவோ, மறுக்கவோ மாட்டேன்.

எனக்கு கிடைத்த இந்த அமைப்பாளர் பதவிக்கு இன்று பொதுமக்கள் அமோக ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும் தந்து கொண்ட வண்ணம் உள்ளனர். அதனால் எமது பிரதேசமான அட்டாளைச்சேனை மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன். அதற்காகவேண்டி அட்டாளைச்சேனை ஒவ்வொறு கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒவ்வொறு கிளைக்குழு அமைத்து அதில் இடம்பெறும் தலைவர், செயலாளர், பொருளாளர்களை மத்திய குழுவுக்கு உள்வாங்கி அவர்களினூடாக குறிப்பிட்ட பிரிவில் வாழும் மக்களின் குறை, நிறைகளையும் அங்கு எவ்வகையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 

என்ற நிலைமைகளை அறிந்து கொண்டு எனது எனது அபிவிருத்தி திட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவுகளுடன் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

அதற்கமைவாக இன்று இடம்பெறுகின்ற கிளைக்குழு தெரிவில் பொருத்தமான பதவிகளுக்கு மிகப்பொருத்தமான நபர்களை தெரிவு செய்வதன் மூலமே உங்கள் பிரிவுக்குரிய அபிவிருத்தி மற்றும் பல நன்மை பயக்கும் திட்டங்கள் கிடைக்க அதிக வசதி வாய்ப்புக்கள் தங்கியுள்ளது என்பதை மனதில் வைத்து உங்கள் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.எல்.பஜூருடீன், பிரதேச உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் (ஜே.பி), ஐ.எல்.நஸீர் (டீ.ஐ.ஜி), மத்திய குழுவின் செயலாளர் ஆசிரியர் ஏ.சீ.எம்.ஹாரீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :