சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு சித்திரவதைக் குள்ளாக்கப்படுவதாகவும் மகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் பானுமதி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பெற்றோர்அவரை மீட்டுத் தருமாறு ஏறாவூர் நகர மேயர் அலிஸாஹிர் மெளலானாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பெற்றோர் நேற்று முறையிட்டுள்ளனர் .
சென்ற வருடம ஒக்டோபர் மாதம் வீட்டுப் பணிப்பெண்களாக சவூதி சென்ற அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான ஊதியமும் வழங்கப்படாத நிலையில் தமது மகள் அடி ,உதை ,கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளார். என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர் .
இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் இதுவரை அவர்கள் நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் தரவில்லை என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார் .

0 comments :
Post a Comment