இலஞ்சம்,ஊழல் மோசடி செய்த 1,200 பொலிஸாருக்கு எதிராக தீவிரவிசாரணைகள்.


லஞ்சம் பெறல், ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 1,200 பொலிஸாருக்கு எதிராக தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு என பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

அதேவேளை பொலிஸ் உயர் அதிகாரிகளின் அலுவலக மற்றும் தனிப்பட்ட தரவுகளையும் சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டுவதற்கான துரித நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.VK
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :