முஸ்லிம் வர்த்தகர் கொலை செய்யப்பட சம்பவம் பிரதிப்பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை.


முஸ்லிம் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்தனவிடம் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் சுமார் 8 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட வாஸ் குணவர்த்தன இன்றைய தினமும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பொலிஸாரினதும் கடமைநேர பதிவுப் புத்தகமும் பேலியகொட பொலிஸ் நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்டு அது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதுடன் கைரேகை தொடர்பிலான விஷேட ஆய்வுகளும் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :