தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பதவி நீக்கப்படும்.

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார்.

பிரதேச நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த பதவிகளிலிருந்து நீக்கப்படும் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பட்சத்தில் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :