மினுவாங்கொடை - ஜாபாலவத்த பகுதியில் பெண்ணொருவரை தடுத்து வைத்திருந்தவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.வீடொன்றிற்குள் இன்று அதிகாலை பெண்ணொருவரை தடுத்து வைத்து அவரது கழுத்தை வெட்ட முற்படுவதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்
கான முயற்சியில் மினுவாங்கொடை பொலிஸார் ஈடுபட்டனர்.
குறித்த வீட்டிற்கு அருகில் பொலிஸார் சென்ற வேளையில் சந்தேகநபர் பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து பெண்ணை காப்பாற்றுவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment