ஒரு நொண்டி எலியைப் போன்றதே இந்த 13வது திருத்தமாகும் இதை வைத்து அரசியல் பூனைகள் விளையாட்டு நடாத்துகின்றன என உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை(1.6.2013) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மடடக்களப்பு அலுவலகம் நடாத்திய இளைஞர் தின வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பசீர் சேகுதாவூத் 13வது திருத்தம் என்பது எலி பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடும் ஆனால் அதை கடித்து சாப்பிடுவதில்லை. அதே போன்று தான் இந்த 13வது திருத்தமுமாகும். இந்த 13வது திருத்தம் எனும் எலியை வைத்து அரசியல் பூனைகள் விளையாடுகின்றன.
இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்ததுஇ அதில் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்பட்டன. உள்நாட்டு யுத்தம் இருந்தது இதன் மூலம் பெரும் அழிவுகள் ஏற்பட்டன என்பதற்கான ஆதாரமே இந்த 13வது திருத்தமாகும்.
13வது திருத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இனப்பிரச்சினை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும் பல விடயங்கள் இடம் பெற்ற போதிலும் அவைகள் எதுவும் சான்றாக அமையவில்லை. ஆனால் இந்த 13வது திருத்தம் மாத்திரம் ஒரு சான்றாக உள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதன் மூலம் இந்த 13வது திருத்தம் வந்தது. ஆனால் இதை யாரும் அன்று ஏற்கவில்லை. தனி நாட்டுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை அதே போன்று அன்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டார நாயக்க ஏற்கவில்லை. அன்றைய மாகாண சபை தேர்தலை கூட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டார நாயக்க பகிஷ்கரித்திருந்தார்.
பெருந்தேசிய வாத கட்சியான ஜே.வி.பி. அன்று எதிர்த்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்த்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த சட்ட மூலம் முஸ்லிம்களின் முதுகின் மேல் எழுதப்பட்ட அடிமைச்சாசனம் எனக் கூறி இதை எதிர்த்தார். சில தமிழ் இயக்கங்களும் அன்று எதிர்த்தன. தவிர்க்க முடியாமல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன அதை ஏற்றுக்கொண்ட போதிலும்; ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தேசிய காணி ஆணைக் குழுவை அமுல் படுத்தவுமில்லை. எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவுமில்லை அதற்கான நடவடிக்கை எடுக்கவுமில்லை.
ஆனால் இன்று அந்த 13வது திருத்தத்தை எதிர்த்த யாரும் உயிருடன் இல்லை. எனினும் இன்றும் அந்த 13வது திருத்தமிருக்கின்றது.
தனி ஒருவர் மரணித்தால் அந்த சமூகம் மரணித்து விடாது. அந்த சமூகத்தின் கொள்கையும் மரணித்து விடாது. தனி ஒருவரை அழித்து விடலாம் ஆனால் அந்த சமூகத்தை அழித்து விடமுடியாது.
பல்லாயிரக்கணக்கான பெறுமதியான உயிர்களையும்இ பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் இலட்சக்கணக்கானோரின் உடமைகளையும் இழந்தது வடமாகாண சபை தேர்தலில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி பெற்றுக் கொடுப்பதற்கும் இன்னும் சிலருக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தானா
பிரிவினையையும் வெறுப்பையும் இல்லாமல் செய்து புதிய அரசியல் சூழ் நிலைக்கு ஏற்ப நாம் சிறுபான்மை அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.புதிய அனுகுமுறைக்கேற்ப கடந்த கால அனுபவங்களை வைத்து யதார்த்தின் தளர்த்திற்கு நாம் வரவேண்டும்.
அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்தோம். வீதிக்கு செல்லமுடியாது. பயமும் பதற்றமும் இருந்தது.
தொழிலுக்கு செல்லும் கனவன் வீடு வருவானா என்று மனைவியும் வெளியில் செல்லும் சகோதரன் உயிருடன் வீடு திரும்புவானா என்று இருந்த காலம் போய் இன்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றோம்.
யுத்தத்தை வென்றோம் எனவும் சிலரை தோற்கடிக்க வைத்து விட்டோம் என்றும் கூறுவதை விடவும் யார் வென்றார்கள் யார் தோல்வியடைந்தார்கள் என்றெல்லாம் கூறுவதற்கப்பால் யுத்தம் எப்படியோ முடிந்து விட்டது.
இந்த நிலையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ் நிலைக்கு நாம் முகம் கொடுக்கத்தயாராக வேண்டும்.
இளைஞர்கள் வாழ்வை சீரழிக்காமல் சந்தோசமாக வாழ்வதற்கு அறிவைப் பயன் படுத்தி வாழ்ககையில் முன்னேற வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment