(எம்.பைஷல் இஸ்மாயில்)
உலக சுற்றாடல் வாரத்தையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்துள்ள சுற்றாடல் விழிப்புணர்வு செயலமர்வும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள பின்தங்கிய கிராமமானசம்புநகர் கிராமத்தின் வீதிகளுக்கு தெருவிளக்குப் பொருத்தும் நடவடிக்கையும் நாளை 2013.06.09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது.
சம்புநகர் சனசமூக நிலையத்தின் தலைவர் ஏ. தஸ்லிம் தலைமையில் வீட்டுத்திட்ட கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினருமாகிய சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இச்செயலமர்வில் சமகாலத்தில் சுற்றாடலைப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றாடல் மாசடைவதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவான விளக்கமும் வழங்கப்படவுள்ள அதேவேளை வெளிச்சமின்றிக் காணப்படும் வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கையும் தவிசாளரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் ஏ. அப்துல் சித்தீக் தெரிவித்தார்.
மேற்படி சம்புநகர் கிராம மக்களின் குறைபாடுகளை தவிசாளர் நேரில் சென்று கேட்டறிந்து கொள்வதுடன், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுகளில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment