ரிசானா நபீக்கை சவுதிக்கு அனுப்பியமுகவர் நிலையம் வேறு பெயரில் பதிவு-அமைச்சர் டிலான்


ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் சவுதிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணை அனுப்பிய குறித்த முகவர் நிறுவனம் இரு வேறுபெயர்களில் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேற்படி தகவல்களை சிங்கள ஊடகமொன்றும்வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :