அதிகாரங்களை திருத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது-ஹசனலி


(எம்.பைஷல் இஸ்மாயில்)

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துவது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.ரீ.ஹசனலி தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பெரும்பான்மையை பெறமுடியாது. அமைச்சர் டக்ளஸ், வாசுதேவ உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களும் இதை எதிர்பார்கள் என்று நம்புகிறோம். என தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் 13 ஆவது சரத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை குறைக்கவோ ஒழிக்கவோ நாம் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :