
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இரண்டாயிரத்து 500 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சிறைக் கைதிகளை வெளியேற்றும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர கூறியுள்ளார்.
முதற்கட்டமாக இடவசதியுள்ள சிறைச்சாலைகளுக்கு படிப்படியாக கைதிகள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
களுத்துறை, காலி, வட்டரெக்க ஆகிய சிறைச்சாலைகளுக்கு தற்போது வெலிக்கடையில் இருந்து கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அனைத்துப் பெண் கைதிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment