வரதட்சணையாக எருமை மாடு கொடுக்காததால் மனைவிக்கு தீ வைத்த ஆசாமி.


பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், நஷ்ரத்பூர் கிராமத்தை சேர்ந்த உபேந்திரா மஹ்தோ என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரினா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்தின்போது வரதட்சணையாக தருவதாக கூறிய எருமை மாட்டை ரினா தேவியின் பெற்றோர்கள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக மனைவியிடம் உபேந்திரா அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

நேற்றும் ரினா தேவியிடம் உபேந்திரா இதுபோல் சண்டை போட்டார். ரினா தேவியும் அவரை எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உபேந்திரா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை 14 மாத ஆண் குழந்தையை மடியில் வைத்திருந்த ரினா தேவி மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.

உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ரினா தேவி(25) மற்றும் 14 மாத கைக்குழந்தை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக பதுங்கியிருக்கும் உபேந்திராவை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :