பேஸ்புக் மூலம் மகனுக்கு ஹாய் சொன்ன தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!!

இங்கிலாந்தில் வசித்து வருபவர் கார்ரி ஜான்சன்(46). இவர் சுமார் 8 வருடங்களுக்கு முன், தனது மனைவியை விவாகரத்து செய்தார்.அப்போது, அவர் தனது இரண்டு மகன்களையும் எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும், குறிப்பாக அவர்களின் திருமண நிச்சயதார்த்ததின்போதோ, திருமணத்தின்போதோ அல்லது மற்ற எதற்காகவுமோ வாழ்த்தக்கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது.

இந்த அறிவிப்பு உள்ளூர் பத்திரிகையிலும் வந்தது. இது அவரது வாழ்நாள் முழுவதற்குமான தடை என்று குறிப்பிடப்ப்பட்டிருந்தது. இந்நிலையில், கார்ரி தடையை மீறி, தன் மகனுடைய 21வது பிறந்தநாளுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து அறிவித்தார்.

அறிவிக்கப் பட்டிருந்த தடையை மீறி, வாழ்த்து தெரிவித்த குற்றத்திற்காக கார்ரி தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கார்ரி முறையாக கைது செய்யப்படவில்லையாம். இதுவரை அவர் சார்பாக வாதிட எந்த வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த கார்ரியின் மகனான சாம்…

‘என்னுடைய தந்தை நல்லவர் அவர் எப்போதுமே காவல்துறையினரிடம் பிரச்சினை செய்ததில்லை, எனவே அவரை குற்றவாளிபோல் நடத்துவது தவறு’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தீர்ப்பு கொடுமையானதாகவும், விமர்சிக்கத்தக்க விதத்தில் இருப்பதாகவும் இதுபோன்ற விமர்சிக்கக்கூடிய நடைமுறைகள் தொடர்ந்து நீடித்திருந்தால் குடும்ப உற்வுகள் சிதைந்து விடும்.

எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :