நோயின் கொடுமை தாங்க முடியாமல் இளம் பெண் தற்கொலை.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26) என்ற இளம் பெண்ணே இன்று (03) காலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவரது சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர். தனுசன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :