பண்டாரவளை கொலதென்ன ரயில்வே கடவையில் சீமெந்து ஏற்றப்பட்டிருந்த டிரக் வண்டியொன்று குடைசாய்ந்ததில் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த பொடிமெனிக்கே நகர்சேர் கடுகதி ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
பொடிமெனிக்கே ரயில் இரவு 7 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடைய வேண்டியுள்ள போதிலும், அது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவிக்கின்றது.
ரயில் கடவையிலிருந்து டிரக் வண்டியை அகற்றி, ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் உதவியை நாடியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment