அணு ஆயுதங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விசேட படையினரின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக பாகிஸ்தான் அதிகரித்துள்ளது.கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை பாதுகாப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலமான அடித்தளத்தை இடுவதற்கும், அணுக்கட்டமைப்பிற்கான பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவதின் தரத்தினை சர்வதேச மட்டத்தில் பேணுவதற்கும் என இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2013 - 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார் இதனைக் கூறியுள்ளார்.
இந்த கட்டமைப்புக்களுக்கான ஆபத்து குறித்த முன்னெச்சரிக்கை இப்போது உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment