சியாமின் படுகொலைக்கு 21 கோடி ரூபா கடனைக் கொடுக்க முடியாத நிலையே காரணம்.


ம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாமின் படுகொலைக்கு 21 கோடி ரூபா கடன் விவகாரமே காரணம் என தற்போது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நண்பர், கொலையுண்ட வர்த்தகருக்கு 21 கோடி ரூபா கடன் கொடுக்க வேண்டும் எனவும் அதனைக் கொடுக்க முடியாத நிலையிலேயே அவரைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

வர்த்தகர் சியாம் தனது வர்த்தக நண்பர்கள் பலரிடமிருந்தும் நம்பிக்கையினடிப்படையில் பணத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கியிருந்ததாகவும் அக் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்தே நண்பர் சியாமை கொலை செய்வதற்கு பாதாள உலகத்தினருடன் இணைந்து திட்டமிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :