
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 10 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த போட்டி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இருந்து 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை எடுத்தது.
அதிகபட்சமாக அணியின் தலைவர் குக், 64 ஓட்டங்களை விலாசினார். தொடர்ந்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால், 24 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே அந்த அணியால் பெற முடிந்தது.
இதனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
0 comments :
Post a Comment