முன்னாள் EP MPC பரீத்தின் மாமனார் KKY கடற்கரையில் சடலமாக மீட்பு.


ட்டக்களப்பு-காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 76 வயது வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர், அலியார் முஹம்மது இப்றாஹீம் வயது 76 எனவும், எட்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அவர்களுடைய மனைவியின் தந்தையாவார்.

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், அலியார் முஹம்மது இப்றாஹீம் என்னுடைய மாமா. பள்ளிவாயலில் முஅத்தினாக பல வருடங்கள் கடமையாற்றி தற்போது வீட்டில் ஒய்வு பெற்று வந்ததாகவும் இன்று லுஹர் தொழுகைக்காக சுமார் 12 மணியளவில் வீட்டில் இருந்து பள்ளிவாயலுக்கு வந்தவர் கடற்கரையில் உள்ள சவுக்கு மரத்தில் தனது துவிச்சக்கரவண்டியை சாய்த்து விட்டு கடலுக்கு வந்தவர் விழுந்து இருக்கலாம் எனவும் சரியாக என்ன நடந்து என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதேச மக்களினால் காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இவரை ஜனாசா நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மிக சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :