(எம்.பைஷல் இஸ்மாயில்)
பொத்துவில் தொடக்கம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை அட்டாளைச்சேனை - ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.சீ.முஸம்மில் தலைமையில் இடம்பெறவுள்ளன.
இந்த சாரணர் பயிற்சிப் பாசறை எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறவுள்ளது.
இப்பாசறையில் மாவட்ட சாரணிய ஆணையாளர் ஐ.எல்.மஜீட், அக்கரைப்பற்று – கல்முனை சாரணிய பொறுப்பாளர் எம்.ஐ.முஸ்தபா, உதவி மாவட்ட ஆணையாளரும் தேசிய சாரணிய ஊடகவியலாளருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் கே.எல்.தமீம், ஏ.ரவீந்திரன், எம்.எஸ்.மலீக் அட்டாளைச்சேனை பிரதேச சாரணிய பொறுப்பாளர் ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் பாடசாலையின் சாரணிய ஆசிரியர் எம்.சகுர்டீன் ஆகியோர் இப் பயிற்சிப் பாசறையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :
Post a Comment