சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி வசதி முதல்வர் சிராஸ்


(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் நேற்று (20.05.2013) காலை நடைபெற்றது.

அல் கமறூன் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டியின் போது பிரத அதிதியாக கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அதிபரினால் வித்தியாலயத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அம்மகஜரிக் கேற்பவே குறித்த ஒலிபெருக்கி சாதனங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர முதல்வரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்து வாழ்த்துப் பாவும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம் அவர்களினை வரவேற்றும் அவரின் சேவையினை பாராட்டியும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிஇ  கோட்டக் கல்விப் பணிப்பாளர்இ முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :