அரசாங்க அமைச்சர்கள் சிலர் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவு.

ரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோருவதை அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர் ஆதரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட அமைச்சர்களான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டி.யூ குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே ஆதரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சர்கள் மூவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அண்மையில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் 13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் நிலையில் இடதுசாரி அமைச்சர்களுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக தமிழ்த்தேசியக்கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கக்கூடாது என்றும் இந்த இடதுசாரி அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :