கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளது.
ஏற்கனவே வடக்கின் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு - கண்டி, குருணாகலை மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கவும் இந்த உடன்படிக்கையில் இணக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment