13 வயது பாடசாலை மாணவி அவரது சகோதரியின் கணவரால் பாலியல் பலாத்காரம்.


வவுனியாவில்13 வயது பாடசாலை மாணவி அவரது மைத்துனரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி யோ.ஜெயக்கெனடி தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி, அவருடைய சகோதரியின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (28) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சிறுமி பல நாட்களாக பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் சிறுமி நேற்று (28) முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து இத்தகவல் எமக்கு அக் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமக்கு அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக யோ.ஜெயக்கெனடி குறிப்பிட்டார். 

இதன் பின்னர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி தலைமையில் பெண்கள் பிரிவு பொலிஸாரும் சாந்தசோலை கிராமத்திற்கு சென்று கைது செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :