பூஜாபிட்டியபிரதேச சபை பிரிவிலுள்ள கல்கந்த பாதையை அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து அம்கும்புறை பிரதான வீதியில் குருக்கே அமாந்து பௌத்த பிக்கு உற்பட பொதுமக்கள ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
சுமார் ஆயிரம் பிரதேசமக்கள்; மற்றும் பாடசாலை மாணவர்கள். கண்டி- அங்கும்புறை பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அமைதி இன்மைஏற்பட்டது.ஆர்ப்பாட்டத்தில்ல் ஈடுட்டஅவர்கள் சவப் பெட்டி ஒன்றையும் உடன் வைத்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பாதையை கார்பட் போட்டு அபிவிருத்தி செய்யவதற்கு இரண்டுவருடங்களுக்கு முன் அடிக்கல் நாட்ப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிரதேசமக்கள் தெரிவித்தனர்.
அது இன்னும் இடம் பெறவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டினர்.
குறப்பிட்ட முஸ்லிம் அமைசச்ர் ஒருவர் இப் பாதைஅபிவிருத்திக்குப் பணம் ஒதுக்கிய போதும் மற்றொறு பெரும்பான்மை இன பிரதேச அரசியல் வாதி தலையிட்டு அதனை தடுத்துள்ளதாகவும் பிரதேசமக்கள் குற்றம் சாட்டினர்.
கல்கந்த விஹாராதிபதிவண.அலவத்தேகம ஸ்ரீ ராஹுல தேரர் கண்டி - அங்கும்புரைபிரதான வீதிக்குக் குறுக்கேவீதியில் சயனித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இது சம்பந்தமாக உரியவரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்கும் வரை தமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்றுஅவர் கூறினார்.
இது பற்றி பூஜாப்பிட்டிய பிரதேசசபையின் தலைவர் அனுரமடலுஸ்ஸவிடம் வினவிய போது இப் பாதைக்கும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது உண்மை என்றும் ஆனால் அதற்கான கலவை இயந்திரங்கள் இது வரை வந்து சேராதகாரணத்தால் காபட் இடும் பணி தாமதமாகி உள்ளதாகவும் கூறினார். மிக விரைவில் பாதைசெப்பனிடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரவித்தார்.
அமைச்சர் ஒருவர் ஒதுக்கிய பணத்தை தடை செய்துள்ளதாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வார்ப்பாட்டம் காரணமாக குறிப்பிட்டகால இடைவெளியில் வாகன போக்குவருத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -


0 comments :
Post a Comment