தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இரு பிரிவுகள் -அமைச்சர் சுசந்த



























மிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரு பிரிவு இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (09) வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றார். அவர் அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு வந்து மக்களது தேவைகளை முன்வைப்பார். அவரால் முன் வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை நாம் நிறைவு செய்து கொடுத்துள்ளோம். அவரது நிதியினை மதத்தளங்களின் புனரமைப்புகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை நான் வழங்கியுள்ளேன்.

ஆனால் வவுனியாவில் மட்டும் ஒரு பிரதேச சபை வேறு விடயமாக செயற்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரு பிரிவு இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்காகவே உள்ளது. அபிவிருத்தி திட்டங்களை காட்டி மக்களது வாக்குகளை பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. ஆனால் வவுனியா தமிழ் பிரதேச சபையில் மட்டும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அரசாங்கம் நிதியினை வழங்கினாலும், பிரதேச சபை அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடத்தில் இருந்து எனக்கு வந்துள்ளது. அதிகாரிகள் கூட தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இந்த நிலை தொடருமெனில் பிரதேச மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இல்லாமல் போய்விடும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை உயர் மட்ட அதிகாரிகள் மட்டும் அறிந்திருப்பது போதாது, அது கிராம அடிமட்ட மக்களையும் சென்றடைய வேண்டும என்பது தான் எமது எதிர்பார்ப்பு. அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.

அமைச்சர் றிசாத் பதியுதீனால் முன் வைக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கு எமது அமைச்சு அனுமதியளித்து வருகின்றது. அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் தான் அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும். எனவே சகல திட்டங்களும், பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியுடன் எமது அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வவுனியா அரசாங்க அதிபர் எம்.கே பந்துல ஹரிச்சந்திர, வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன், வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முத்து முஹம்மது உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :