கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபின் இணைப்புச்செயலாளர் ஏ.எம்.
இன்ஷாட்டின் வீட்டிற்கு இனம்தெரியாத நபர்களால் இன்று 04.05.2013 இரவு 10
மணியளவில் கல்வீச்சு இடம்பெற்று வீட்டின் இரு அறைகளின் கண்ணாடிகள்
உடைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கும் சிறிது சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இனம்தெரியாத 4 நபர்களே மேற்படி கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக
வீட்டின் அயலவர்கள் தெரிவித்தனர்.
இதுவிடயமாக இன்ஸாட் குறிப்பிடும்போது, எனக்கு தனிப்பட்ட விரோதிகள் எவரும்
இல்லை என்றும்
ந்த செயலை முதல்வரின் இணைப்புச்செயலாளர் நான் என்ற
வகையில் முதல்வருடன் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உள்ளுர்
அரசியல்வாதிகளின் அடியாட்களே இவ்வாறு செய்திருக்கலாம் என நான்
சந்தேகிக்கின்றேன். என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் முதல்வரை
தனிமைப்படுத்தி, அவரது பதவியை பறித்தெடுத்து வேறு ஒருவருக்கு வழங்கும்
திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த அடாவடித்தனங்கள்
மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவ நேரம் தனது மகள் கதறி அழுதுகொண்டு வந்ததாகவும், இந்த
சம்பவத்தால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
இது விடயமாக கல்முனை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து
ஸ்தலத்திற்கு வந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments :
Post a Comment