பொத்துவிலில் பிறந்து மறு நாளே மரணத்தை தழுவிய இரு பச்சிளங் குழந்தைகள்.






பொத்துவில் ஓர் அழகிய கிராமம் அக்கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவமே இது

ஒரு தாய் ஒரு பிள்ளையை தன் வயிற்றில் சுமந்து 10 மாதங்கள் அதனால் அவள் படும் கஷ்டங்கள் எல்லாம் பிரசவித்த குழந்தையின் முகம் பார்த்தவுடனேயே மறந்துவிடுவாள் ஆனால் அக் கஷ்டங்களை மீண்டும் இரு நாட்களின் பின்பு பிள்ளையின் மரணம் மூலம் அனுபவிப்பாளாக இருந்தால் அவளைப்போல் வேதனைப்படுவது உலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். 

அதுவும் அழகான இரு குழந்தைகள் மரணத்தை தழுவினால் யார்தான் தாங்குவார்கள். 

இயற்கை மரணம் என்றால் பரவாயில்லை, அம்மரணம் உறவினர்களால் ஏற்படுத்தப்பட்டால் எவ்வாறு அவ் உறவினர்களை இரக்க குணம் கொண்டு பார்ப்பது? அவ்உறவினர்களை உறவை விட்டு தள்ளிவைப்பதா? சட்டத்தின் பிடியில் கொடுப்பதா? சட்டத்தில் ஒப்படைத்தால் மீண்டும் அவ்வேளையை செய்வார்கள் உறவைத் துண்டிப்பதே சாலச்சிறந்த தீர்வாக அமையும்.

அதே போல்தான்,

கல்விச் செல்வம் மிகப்பெரிய செல்வம். ஆனால் பொத்துவிலி;ன் கல்வியை மாணவர், பெற்றார் போராட்டம் மூலமாகப் பெறவேண்டியுள்ளது.

அண்மையில் பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயம், பொத்துவில் அல்-கலாம் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் இடம்பெற்ற தொடர்போராட்டம் ஓரளவுக்கேனும் வெற்றியை தந்துள்ளது. பொத்துவிலில் உள்ள ஏனைய 16 பாடசாலைகளும் இவ்வாறுதான் போராட்டங்களை மேற்கொண்டு அவர்களின் உரிமையைப் பெறவேண்டியுள்ள நிலையிலுள்ளது.

கல்விச் செயலாளரின் EP/03/PL/5.0 Pen new Sch இலக்கம் கொண்ட 30.04.2013 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பொத்துவில் இரு அழகான பச்சிளம் குழந்தைகள் போல் இரு புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவ் உருவாக்கத்தினால் பொத்துவில் உப வலயப் பாடசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் உப பிரிவாக இயங்கிய பழைய தபாலக முன் வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு அஸ்-ஸாதிக் என்னும் அழகிய நாமமும், தாறுல்பலாஹ் முஸ்லிம் பாடசாலையின் கிளைப்பாடசாலையாக இயங்கிய மதுரஞ்சேனையில் அமைந்துள்ள பாடசாலைக்கு அல்-குபா எனும் அழகிய நாமமும் சூட்டப்பட்ட நிலையில் அவை இரண்டினையும் இரு வருடங்களாக பொத்துவில் தாய் தனது வயிற்றில் சுமந்து வந்தாள். 

இதனால் அத்தாய் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. அதிலும் அல்-குபா எனும் அழகிய குழந்தை அடைந்த துன்பம் சமூகப் பிரச்சினையை எதிர் கொள்ளவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தது. புதிய பாடசாலையின் அனுமதி கிடைத்தவுடன் பொத்துவில் தாய் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும்,

அண்மையில் 02.05.2013 இல் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அதன் குறைகளை நிவர்த்தி செய்ய கிழக்குமாகாண அரசியல் வாதிகளின் பணிப்புரைக்கமைய விஜயம் செய்த மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்களின் விஜயத்தின் போதே அக்குழந்தைகள் இரண்டினையும் பாடசாலையாக பொத்துவில் பிரசவித்தது. அவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர் றஹீம் ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.

விடயத்திற்கு வருகின்றேன்.

கௌரவ கிழக்குமாகாண அமைச்சர், உதுமாலெவ்வை கல்வி அமைச்சர் விமல வீரதிசாநாயக்க ஆகியோருக்கு பொத்துவில் சமூகம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளது. ஏனெனில் அவர்களின் முயற்சியம் இப்புதிய பாடசாலைகள் உருவாவதற்கு காரணமாகும். அவ்வாறே வலயக்கல்விப் பணிப்பாளர், பொத்துவில் வாழ் கல்விச் சமூகம் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளது. 

ஆனால் மாகாண கல்விப் பணிப்பாளரின் வியஜயத்தில் மேற்கூறிய இரு அமைச்சர்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமையின் காரணமாக பெற்ற குழந்தைகளை உறவினர்கள் கொல்வது போல் பாடசாiயின் அனுமதியை இரத்துச் செய்வது எவ்வகையில் நியாயமானதாக அமையும் என்பது புதிராக உள்ளது. 

ஏனெனில் உதவிச் செயலாளரின் ஒப்பத்துடன் 02.05.2013 இல் அதே கடித இலக்கத்துடன் வலயக்கல்வி பணிப்பாளருக்கு பெக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அக்குழந்தைகளை கொன்று விட்டோம் என்பது போல் அப்பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் குறிப்பிட்ட அனுமதி மறுக்கப்பட்ட பிரதான காரணமாக முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி கிடைக்கவில்லையாம் அவ்வாறெனில் 30.04.2013ல் அத்திணைக்களத்தின் அனுமதி எவ்வாறு கிடைக்கப்பெற்றிருந்தது?

பாடசாலை ஆரம்பித்தால் நாடு செழிப்படையும் என்பது யாவரும் அறிந்ததே அதிலும் பொத்துவில் போன்ற அதிகஷ்ட பிரதேசங்களில் உருவாக்கப்பட்டால் அதன் நிலையை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

அரசியலுக்கு பொத்துவிலைப் பயன்படுத்தும் பொத்துவில் வாழ் அரசியல் வாதிகளே! ஏனைய அமைச்சர்களே பாடசாலையை தொடங்குவதிலுமா உங்கள் விளையாட்டை காட்டுகிறீர்கள். பாடசாலையின் மூலம் சமூகம் அடையும் நன்மையை விட உங்களின் தனிப்பட்ட அரசியல் நன்மை அதிகமாகிவிட்டதா? இவ்வாறு நீங்கள் கல்வியில் விளையாடினால் உங்கள் உறவுகள் பொத்துவிலுக்கு எதற்கு? சமூகப்பற்று, ஊர் பற்றைப் பற்றி நீங்கள் கதைக்க அருகதையற்றவர்கள். உங்கள் உறவைப் பேணுவதில் ஊர் மக்களுக்கு என்ன இலாபம்?

நீங்கள் கூட்டத்தில் கலந்த கொள்வதற்கும் புதிய பாடசாலைகளை இரத்துச் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? அரசியலுக்காக பாடசாலையை ஆரம்பிப்பதனை இரத்துச் செய்த கூட்டம் உங்களைப்போல் யாரும் இருக்க முடியுமா?

உங்களால் புதிய பாடசாலையை ஆரம்பிக்க முடியும் என்பதனை செயல் மூலம் ஊருக்கு காட்டுங்கள். சமூகம் நன்றிக்கடனுடன் என்றுமே உங்களைப் பார்க்கும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :