மூதூரில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு.








ற.மு. றிபான்
க்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின்  பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் 2013-05-04 ஆம் திகதி இன்று காலை தி/அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பெண்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் இரத்ததான நிகழ்வு காலை 8.30தொடக்கம் மாலை 4மணி வரை நடைபெற்றது. 

 இதில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்தோடு தமது இரத்தத்தை தானம் செய்வதற்கு வருகை தந்திருந்தனர். அதில் தகுதியுள்ள 80 பெண்கள் இரத்ததானம் செய்தனர்.

பெண்கள் பிரிவின் தலைவி நசீபா அஹமட்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் சுபியான், மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்ததான நிகழ்வுகளுக்கு பொறுப்பான வைத்தியர்கள் ஊழியர்கள், மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் சுகாதார பிரிவுக்கு பொறுப்பான என். எம். நஸ்காத்(மருந்தகர்) உட்பட பெண்கள் பிரிவின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் இடையே கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் கௌரவ மன்சூர் அவர்கள் திடீர் விஜயம் செய்து இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களையும், இரத்ததானம் வழங்கியவர்களையும் உற்சாகப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :