வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றின்போது பதினாறு பவுன் தங்க நகைகளும் எழுபத்தையாயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீறாவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முஹம்மது முஹைதீன் முஹம்மது ஹாறூன் மௌலவி என்பவரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் ஜேற்று (24) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜும்மாப் பிரசங்கம் மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை தான் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தாருடன் காத்தான்குடிக்குச் சென்றிருந்ததாகவும் இரவு 10 மணியளவில் திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது ஜன்னல்கள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஏனைய நபர்களைக் கைது செய்யும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment