கடன் வாங்கியவர் பணத்தைக் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியமையினால் கடன் கொடுத்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் நாவாந்துறையில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நாவாந்துறை கடற்கரை வீதியைச் சேர்ந்த திவேந்திரன் யோகராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியின் நகையினை வங்கியில் அடகு வைத்து நபரொருவருக்கு கைமாற்றமாக பணம் கொடுத்துள்ளார். குறித்த நபர் பணத்தினை மீளக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் குடும்பஸ்தர் செய்து வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கியவர் பணத்தைக் கொடுக்கவேண்டிய தவணை முடிந்த பின்பு பணத்தை மீளக்கேட்டுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய நபர் தொடர்ந்தும் ஏமாற்றியுள்ளார். இதனால் குடும்பஸ்தர் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தனது வீட்டில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்.பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் பிரதித் திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம் குமார் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment