இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபாலக அதிபர் தனது மனைவிக்காக தாஜ்மஹாலைப் போன்ற ஒரு சிறிய தாஜ்மஹாலைக் கட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் புலாந்ஷாஹர் என்ற இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபாலக அதிபரான 77 வயதான பைசுல் ஹசன் காதிரி என்பவரே இந்த சிறிய தாஜ்மஹாலை கட்டியுள்ளார்.
இவரின் மனைவி தஜமுலா பேகம் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்துள்ளார். இதனையடுத்தே ஹசன் அவரது மனைவியின் ஞாபகர்த்தமாக அவர் அடக்கம் செய்யப்பட்ட நிலத்திலேயே இந்த தாஜ்மஹாலை கட்டியுள்ளார்.
ஹசனின் வீட்டிலிருந்து 100 கீ.மீ தொலைவில் 5 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பிலேயே இந்த தாஜ்மஹாலை அமைத்துள்ளார். இதற்காக 20 இலட்ச இந்திய ரூபாவினை செலவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஹசன் கூறுகையில், ஷாஜகானின் தாஜ்மஹாலைப் பார்த்தபோது அவர் காதலுக்காக இப்படி ஒன்றை கட்டி சாதாரண மனிதர்களை அவமதித்துவிட்டார் என்று நினைத்தேன்.
ஆனால் எனது மனைவியின் மறைவிற்குப் பிறகு தான் தாஜ்மஹால் பணம் சம்பந்தப்பட்டது அல்ல காதலின் ஆழம் சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்கு குழந்தை இல்லாததால் இருந்த பணத்தை வைத்து எங்களுக்கு சொந்தமான இடத்தில் இந்த குட்டி தாஜ்மகால் கட்டினேன். என் வீட்டில் இருந்து பார்த்தால் நான் கட்டிய தாஜ்மகால் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment