வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வாரிசுகளுக்கும் சலுகை.


மூகக் காப்புறுதிக்கான பொது ஒழுங்கமைப்பின் தற்போதைய விதிமுறைகளின் கீழ் ஏனைய பயனாளர்களுக்குக் கிடைக்கும் அனைத்து நலன்களும் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வாரிசு களுக்கும் கிடைக்குமென சமூகக் காப்புறுதிக்கான பொது ஒழுங்கமைப்பின் பிரதி ஆளுநர் அப்த் அல் அஸீஸ் அல் ஹப்தான் தெரிவித்தார்.

சவூதி அல்லாதோரைத் திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வரிசுகளுக்கு இந்த ஒழுங்குவிதிகள் எவ்வித பாரபட்சமும் காட்டாது என சவூதி ஊடக முகவர் நிலையத்தின் தகவல் தெரிவிக்கின்றது.

சவூதியை சேர்ந்த ஒருவரையோ அல்லது சவூதி அல்லாத ஒருவரையோ திருமணம் செய்யும் சவூதிப் பெண்ணின் வாரிசுகளின் உரிமைகள் சமமானதாகும். சவூதிப் பெண் மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் சவூதியை சேர்ந்த அல்லது சவூதி அல்லாத கணவன் இந்த சமூகக் காப்புறுதிக்கான பொது ஒழுங்கமைப்பின் மூலமான அனைத்து நலன்களுக்கும் உரித்துடையவராவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயனாளியான சவூதிப் பெண்ணொருவர் மரணமடையும் பட்சத்தில் சவூதியை சேர்ந்த ஒருவரையோ அல்லது சவூதி அல்லாத ஒருவரையோ அவர் திருமணம் செய்திருந்தால் இந்த ஒழுங்கு விதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள அனைத்து நலன்களையும் பெறுவதற்கு அப் பெண்ணின் கணவனும் பிள்ளைகளும் உரித்துடையோராவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயனாளியான மரணமானவரின் குடும்ப அங்கத்தவர்கள் சவூதியினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சவூதியினை சேராதவர்களாக இருந்தலும் மரணமானவரின் வருடாந்த பணத்தெகையினை பெற உரித்துடையோராவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒன்றில் குடும்ப அங்கத்தவர்கள் 03பேரை விட அதிகமாக இருப்பின் முழுமையான வருடாந்த பணத்தெகையினையும் 02பேராக இருப்பின் அதில் 75 வீதத்தையும் ஒருவராக இருந்தால் 50 வீதத்தையும் பெறுவர் அல்லது ஒவ்வொரு குடும்ப அங்கத்தவரும் அகக்குறைந்தது 396.75 சவூதி றியால்களையும் 03 பேரை அல்லது அதை விட அதிகமான எண்ணிக்கையினைக் கொண்டிருப்பின் அகக்குறைந்தது 1,983.75
சவூதி றியால்களையும் பெறுவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :